தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம்.
பள்ளிக் கல்வியிலிருந்து தொடக்கக் கல்வித் துறை, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்புத் துறை, ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும்.
தடையின்மைச் சான்றுக்கு விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலகு,துறை மாறுதல் கோரும் விருப்ப கடிதம். தற்போது வகிக்கும் பதவியில் வழங்கப்பட்ட பணிநியமன ஆணை பதவி உயர்வு ஆணை நகல், தற்போது வகிக்கும் பதவியில் தகுதிகாண் பருவம் முடிந்த ஆணை நகல் உள்பட 8 ஆவணங்கள் இணைத்து அனுப்பபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“