Advertisment

அரசு முத்திரை வாடகைக்கு வேண்டும் - வாழும் கலைகள் அமைப்பினர் மனு

அரசு முத்திரைகளை ஒரு வருடத்திற்கு வாடகைக்குத் தாருங்கள் இல்லையேல் நாங்களே தயாரித்து கொள்கிறோம் என வாழும் கலைகள் அமைப்பினர் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
பெட்டிஷன்

அரசு முத்திரை வாடகை கேட்டு மனு

அரசு முத்திரையை வாடகைக்கு தாருங்கள், திமுக உறுப்பினருக்கு அதிகாரம் இருக்கும் பொழுது எங்களுக்கு அளிக்கக்கூடாதா என வாழும் கலைகள் அமைப்பினர்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அரசு முத்திரையை ஒரு வருடத்திற்கு வாடகைக்குத் தாருங்கள் இல்லையேல் நாங்களே தயாரித்து கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

கோயம்புத்தூரைச் சேர்ந்த  வாழும் கலைகள் அமைப்பினர் இருகூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை திமுக உறுப்பினர் போலியாக ஆவணங்களையும் முத்திரைகளையும் தயாரித்து மோசடி செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் இருகூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை  திமுகவை சேர்ந்த உதயநிதி என்பவர் ஆக்கிரமித்து அரசாங்கத்தின் போலி முத்திரை மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்து 50 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மோசடி செய்த நிலத்தின் மீது வருவாய்த் துறையின் பட்டாவும், பத்திரப்பதிவு துறையின் பத்திரமும் இல்லாமல் தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் 50 லட்சம் ரூபாயை திமுக உறுப்பினர் பெற்றுள்ளதாகவும் இதில் அரசு அதிகாரிகளின் தலையீடு ஏதேனும் உள்ளதா அல்லது அவரே போலியாக ஆவணங்களை தயாரித்து விட்டாரா என்று விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டனர். 

திமுக உறுப்பினரே போலி பத்திரங்கள் தயாரிக்கும் அளவிற்கு சாத்தியங்கள் இருந்தால் மக்களுக்கு சேவை செய்கின்ற எங்களைப் போன்றவர்களுக்கு அரசு முத்திரைகளை ஒரு வருடத்திற்கு வாடகைக்குத் தாருங்கள் இல்லையெனில் அந்த முத்திரைகளை நாங்களே தயாரித்துக் கொள்வதற்கு அனுமதி தாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Tn Government covai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment