ஆளுநர் பன்வாரிலால் தூத்துக்குடி வருகை!

குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக ஆளுநர் இன்று தூத்துக்குடி விரைந்துள்ளார்.

கடந்த மே மாதம் 22 ஆம் தேதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100 ஆவது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தபோது வன்முறை வெடித்தது.

இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் நடந்த அன்று, தமிழக ஆளுநர் தூத்துக்குடி மக்களிடம், அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க இன்று பயணிகள் விமானத்தில் தூத்துக்குடி விரைந்துள்ளார்.

தூத்துக்குடி சென்ற பின்பு, பல்வேறு பகுதிகளில் திட்டங்களை ஆய்வு செய்யும் ஆளுநர் திட்டமிட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சென்று நலம் விசாரிக்கும் ஆளுநர், ஆட்சியர் அலுவலகம், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தினையும் நேரில் ஆய்வு செய்கிறார்.பின்பு, மத்திய அரசுக்கு ஆளுநர் வழக்கம் போல் அறிக்கை அளிப்பார்.

×Close
×Close