Advertisment

கோவையில் உங்களை விட அண்ணாமலை குறைவான வாக்குகள் பெற்றது ஏன்? சி.பி ராதாகிருஷ்ணன் பதில்

20 வாரிசுகள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பான ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சிபி ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் எப்படிப்பட்ட விமர்சனத்தை வைக்கிறது என நீங்களே புரிந்து கொள்ளுங்கள் சொல்பவர் யார்? ராகுல் காந்தி.

author-image
WebDesk
New Update
Interviewed by CP Radhakrishnan at Coimbatore Airport

கோவையில் உங்களை விட அண்ணாமலை குறைவான வாக்குகள் பெற்றது ஏன் என்ற கேள்விக்கு கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த இந்த நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள் தங்கள் வாக்குகளை பாரத தேசம் மகத்தான நாடாக முன்னேற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு மூன்றாவது முறையாக வாக்களித்து இருக்கிறார்கள்.

Advertisment

உண்மையிலேயே அந்த மகத்தான ஜனநாயகம் , உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்பது இந்திய தேசம் தான் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கின்ற தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது இருந்த சந்தேகம் முற்றிலுமாக போயிருக்கும் என நம்புகிறேன்.

திமுக மாநாடு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள் அதனால் தமிழகத்துக்கு நன்மையா இல்லையா என்பதை அடுத்து வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்

சி.பி.ராதாகிருஷ்ணனை விட அண்ணாமலை குறைவான வாக்குகள் பெற்றது தொடர்பான கேள்விக்கு,புள்ளி விவரங்கள் ஒருபோதும் பொய் சொல்லுவதில்லை புள்ளிவிபரங்களை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள் நான் உண்மையிலேயே அண்ணாமலையை பாராட்டுகிறேன். எந்த இடத்தில் விட்டோமோ அந்த இடத்திலேயே தொடங்கி இருக்கிறார். அண்ணாமலையின் கடுமையான உழைப்பை யாராலும் மறுக்க முடியாது.

அந்த உழைப்புக்கு கிடைத்த உரிய மகத்தான ஓட்டுக்களாக தான் இதை பார்க்கிறேன். ஒரே ஒரு வருத்தம் இருக்கிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோவை போன்ற ஒரு மாநகரம் மற்ற மாநகரங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டும். தமிழகமும் மற்றும் மாநிலங்களோடு போட்டி போட்டு முன்னேற வேண்டும்.

ஆனால் இந்திய வளர்ச்சியில் தானும் சேர்ந்து முன்னேறுவதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் கோவை மக்கள் வேறு விதமாக முடிவெடுக்கிறார்கள்.

அந்த வளர்ச்சியோடு சேர்ந்து இந்த பயணத்தை தொடருவதற்கு வகை இல்லாமல் செய்து விடுகிறார்கள் என்ற வருத்தம் கொடுக்கிறது

என்னதான் ஒரு மகத்தான முன்னேற்றத்திற்காக நாம் சிந்தனை செய்தாலும் மக்கள் ஆதரவு தரும் வரை காத்திருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்

20 வாரிசுகள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பான ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சிபி ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் எப்படிப்பட்ட விமர்சனத்தை வைக்கிறது என நீங்களே புரிந்து கொள்ளுங்கள் சொல்பவர் யார்? ராகுல் காந்தி.

வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு இருந்தால் பிரதமர் மோடி இரண்டு முதல் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருப்பார் என ராகுல் காந்தி பேசியது தொடர்பான கேள்விக்கு, ராகுல் காந்திக்கு எப்போதும் ஞானோதயம்” என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மதம் இனம் சார்ந்த பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டது தொடர்பாக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கண்டனம் தொடர்பான கேள்விக்கு,மோகன் பகவத் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் எதிர் சிந்தைகள் என்பது இருக்கத்தான் வேண்டும், ஆனால் அதுவே நாட்டின் நலனுக்காக எதிரானதாக, முன்னேற்றத்திற்கு எதிரானதாக  எதிர்மறை சிந்தனையாக  மாறிவிடக்கூடாது என்பதைதான் எல்லோரும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற போது உணர்ச்சிவையப்பட்டு தங்களது கருத்துக்களை வைத்து விடக்கூடாது நல கருத்துக்களை மட்டுமே வைக்க வேண்டும் என்பதைத்தான் சொல்லி இருக்கிறார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் மற்றும் இந்நாள் மாநில தலைவர் இடையேயான கருத்து மோதல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் பேசுவது தொடர்பான கேள்விக்கு, “இந்த கேள்வி அண்ணாமலையை சந்தித்து கேளுங்கள், முன்னாள் மாநில தலைவர்களை சந்தியுங்கள் அவர்கள் எல்லாம் கூறுவார்கள்.ஆனால் நான் இந்த பொறுப்பில் இருந்து கொண்டு இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது நாகரிகமாக இருக்காது என கருதுகிறேன்” என்றார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment