ஆளுநரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,"மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் என்பவர் தபால்காரர்தான்.
தமிழ்மொழியை பாதுகாக்க குரல் கொடுப்பது எப்படி பிளவுவாத அரசியலாகும்? பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்.
தமிழ் மொழி, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு தன்னை பாஜககாரராக காட்டிக் கொள்கிறார் ஆளுநர். அதிமுக மற்றும் பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக நான் தெரிவித்தது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம், 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.
விரைவில் நேரில் சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்குவார் என நம்புகிறோம்" இவ்வாறு முதலமைச்சர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.