தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக உதகைச் சென்றிருந்தார். மே 12ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக உதகைக்குச் சென்ற அவருக்கு, வழியெங்கும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மே 15, 2025 அன்று புகழ்பெற்ற மலர் கண்காட்சியை ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 மட்டுமல்ல, 2031, 2036 எனத் தொடர்ந்து தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் செய்தியாளர்கள் ஆளுநர் வழக்கு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பான கேள்விக்கு எழுப்பினர். அதற்கு ஸ்டாலின், இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.