ஆளுநர் தன்னை அரசர் போல் நினைத்துகொள்கிறார் என்று முரசொலி நாளேடு விமர்சித்துள்ளது.
சட்டசபையில் ஆளுநரின் நடவடிக்கை பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது இந்நிலையில் முரசொலி நாளேடின் தலையங்கத்தில் ஆளுநர் நடவடிக்கை விமர்சிக்கப்பட்டுள்ளது. ” ஆளுநர் மாறவே மாட்டாரா. ஆளுநர் உரையில் மாற்று கருத்து இருந்தால், அதை ஏன் அவர் ராஜ்பவனில் இருந்து கொண்டு கூறவில்லை ? அவர் சட்டசபைக்கு வந்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்? .
அவர் தன்னை ஒரு அரசராக நினைத்துக்கொள்கிறார். வரலாற்றில் முதல் முறையாக ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
ஆளுநர் இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார். அவர் அரசியல் செய்ய வேண்டும் என்று விரும்பினால், அவர் ராஜ்பவனில் இருந்து வெளியேறி, சைதாபேட்டையில் வீடு வாங்கிக்கொண்டு வந்து அரசியல் செய்யட்டும்.
ஆளுநரின் இந்த செயல் தமிழ்நாட்டையும், அதன் மக்களையும் அவமதிக்கிறது.ஆளுநரும், ஆளுநரை இப்படி நடந்து கொள்ள தூண்டிவிடும் மத்திய அரசும் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“