நேற்றைய தினத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அயோதியில் ராமர் கோயிலை கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி திறந்து வைத்தார். இந்நிலையில் பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக ஆளுநர் ரவி தனது மனைவி லட்சுமியுடன் அயோத்தி சென்றார். ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ 500 ஆண்டுகள் காத்திருப்பு, தற்போது முடிவடைந்தது. நாங்கள் எங்களது பக்தியை வெளிப்படுத்த வந்துள்ளோம். ராமர் கோயில் என்பது எங்கள் நம்பிக்கையின் சின்னம். அதிக மக்கள் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா இடங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகின்றனர். நமது நாட்டை வளர்க்க, வலிமையும், ஒன்றாக செயல்பட உதவ வேண்டும் என்று ராமரிடம் பிரார்த்தனை செய்திருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“