/tamil-ie/media/media_files/uploads/2023/01/RS-Bharathi-and-RN-Ravi.jpg)
சென்னை அம்பத்துரில் கருணாநிதி நூற்றாண்டு விழா சனிக்கிழமை (நவ.4) நடந்தது.
governor rn ravi | DMK RS Bharathi | racist comment on Naga people | திமுக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிலவி வரும் முறுகல் மோதல் மீண்டும் ஒரு கட்டத்தை எட்டியுள்ளது.
ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மூத்த தலைவரான ஆர்.எஸ்.பாரதி, 2019 முதல் 2020 வரை ரவி ஆளுநராகப் பணியாற்றிய நாகாலாந்து மக்களைப் பற்றி ஆவேசமாகப் பேசினார்.
அப்போது, “நாய் இறைச்சி சாப்பிடும் மக்கள் கூட ஆளுநரை மாநிலத்தை விட்டு விரட்டும் அளவுக்கு சுயமரியாதையுடன் இருந்தனர். உப்பை உண்ணும் தமிழர்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றார்.
மேலும், ஆர்.எஸ் பாரதி, ஆன்லைன் ரம்மி மற்றும் கேமிங் தளங்களில் பணத்தை இழந்த 50 பேரின் மரணத்திற்கு ஆர்.என்.ரவிதான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, கிண்டிக்கு பதிலாக கீழ்ப்பாக்கத்தில் ஆளுநர் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
“Nagas are brave, honest and dignified people. Thiru R S Bharathi a senior DMK leader publicly insulting them as ‘Dog eaters’ is scurrilous and unacceptable. I urge Mr Bharathi not to hurt a community of which the whole of India is proud.”-Governor Ravi
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 5, 2023
இது குறித்து அவர், "அவரை யாராவது (ஆளுநர்) கீழ்ப்பாக்கத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது குற்றாலத்தில் சிகிச்சை பெற வைக்க வேண்டும்" என்றார்.
நாகை மக்கள் குறித்த பாரதியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், ஆளுநர் ரவி, திமுக தலைவருக்கு ஒரு சிறு அறிக்கையில் பதிலடி கொடுத்தார்.
அதில், நாகர்கள் தைரியமான, நேர்மையான மற்றும் கண்ணியமான மக்கள். தி.மு.க.வின் மூத்த தலைவர் திரு ஆர்.எஸ்.பாரதி அவர்களை ‘நாய் தின்பவர்கள்’ என்று பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது,
ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் ஒரு சமூகத்தை காயப்படுத்த வேண்டாம் என்று பாரதியிடம் கேட்டுக்கொள்கிறேன்,'' எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.