/tamil-ie/media/media_files/uploads/2023/07/rn-ra.jpg)
உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்தனர். மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.
மாநாட்டில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற துணை வேந்தர் சந்திரசேகர் தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி திரும்புவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் தமிழக ஆளுநர் ரவி இன்று நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர்.
ஊட்டியில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.35 மணிக்கு கோவை வருகிறார்.
பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாநாடு நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.
இந்நிலையில் ஊட்டியில் தமிழக ஆளுநர் ரவி இன்று நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். அதேபோல பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இம்மாநாட்டை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக பிரதிநிதிகள் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சில தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ள நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார்.
கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. துணை வேந்தர்களின் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக ஆர்.என்.ரவி கூறினார்.
இதுபோன்று ஒரு அசாதாரண சூழல் முன்னொப்போதும் ஏற்பட்டது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடப்பது பிடிக்கவில்லை என உதகையில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.