தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 11) சென்னை கிண்டியில் நடந்த "பாரத பண்பாடு" புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகம் முழுவதும் உண்மையை சொல்லவில்லை. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் கூட பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள். ராமேஸ்வரம் கோயில் கோபுரம் வண்ணப்பூச்சுகள் இன்றி பொலிவு இல்லாமல் காட்சியளிக்கிறது, என்று கூறினார்.
முன்னதாக கடந்த 6 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 192வது அவதார தினவிழா நிகழ்ச்சியில், பேசிய ஆளுநர் ஆ.என். ரவி, ”திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல்கள் போலியானது. ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜி.யு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர். இயேசுவையும் பைபிளையும் எனக்கு பிடிக்கும். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்,” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“