ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஹெராயின் கடத்தப்படுகிறது என ஆளுநர் ஆர்.என். ரவி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஹெராயின் கடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிலர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் உள்ள சிலருடன் இணைந்து ஹெராயின் இறக்குமதி செய்கின்றனர். இந்த விஷயங்கள் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் விழிப்புணர்வு மாநாட்டில் ஆளுநர் ஆர்.என் ரவி இவ்வாறு பேசியுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள் 59 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், “தமிழ்நாட்டில் செயற்கை போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர் எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“