அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் தரத்தில் தொடர் சரிவு: ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சனம்

“மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடர் சரிவில் உள்ளன. தரத்தில் ஏற்பட்ட இந்த சரிவு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

“மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடர் சரிவில் உள்ளன. தரத்தில் ஏற்பட்ட இந்த சரிவு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
RN Ravi EDNXT

“இ.டி.என்.எக்ஸ்.டி மாநாட்டில் ஆளுநர் ரவி, தேசிய கல்விக் கொள்கையை இந்தியாவின் கல்வி நிலப்பரப்பை அடிப்படையிலேயே மாற்றியமைத்த ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை தருணம் என்று போற்றினார். Photograph: (Image Source: x/ @rajbhavan_tn)

சென்னையில் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழின் இ.டி.என்.எக்ஸ்.டி (EDNXT) கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

Advertisment

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “இ.டி.என்.எக்ஸ்.டி மாநாட்டில் ஆளுநர் ரவி, தேசிய கல்விக் கொள்கையை இந்தியாவின் கல்வி நிலப்பரப்பை அடிப்படையிலேயே மாற்றியமைத்த ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை  தருணம் என்று போற்றினார். 

புதுமை கலாசாரத்தை வளர்த்தெடுப்பது, தொழில்முனைவோரை வளர்ப்பது மற்றும் மறைந்திருக்கும் திறனை வெளிப்படுத்துவதன் மூலம், இந்தக் கொள்கை இந்தியாவை அறிவுசார் சொத்துகள் உருவாக்கத்தில் ஒரு பெரிய பாய்ச்சலுக்கு உந்த வைத்துள்ளது, மேலும், தொழில்முனைவோர் திறமை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மேம்பாட்டில் உலக தலைவர்களிடையே நமது தேசத்தை நிலைநிறுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

ஆளுநர் அவர்கள் உயர்கல்வியில் நிலவும் வேறுபாடு குறித்து தனது தீவிர கவலையை ஆளுநர் ஆர்.என். ரவி வெளிப்படுத்தினார். தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடும்போது, மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடர் சரிவில் உள்ளன. தரத்தில் ஏற்பட்ட இந்த சரிவு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது. அவர்கள் அடிப்படையிலேயே தங்கள் கல்வி மற்றும் வாய்ப்புகளுக்காக  அரசு கல்வி நிறுவனங்களை நம்பியுள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை எட்டும் பயணத்தில் தரமான கல்வி கிடைக்காத பெரிய எண்ணிக்கையிலான மக்களைக்  கொண்டிருப்பதை நம்மால்  ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று ஆர்.என். ரவி பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: