Advertisment

மீட்புப் பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை என மத்திய ஏஜென்சிகள் கவலை: ஆளுனர் ஆர்.என் ரவி

மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்திய நிலையில், மீட்புப் பணிகளில் மாநில அரசின் ஒருங்கிணைப்பு இல்லை என மத்திய ஏஜென்சிகள் கவலை தெரிவித்ததாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Governor RN Ravi

ஆளுநர் ஆர்.என். ரவி Credit: X/@rajbhavan_tn

தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு - நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்திய நிலையில், மீட்புப் பணிகளில் மாநில அரசின் ஒருங்கிணைப்பு இல்லை என மத்திய ஏஜென்சிகள் கவலை தெரிவித்ததாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

Advertisment

தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்திய நிலையில், மீட்புப் பணிகளில் மாநில அரசின் ஒருங்கிணைப்பு இல்லை என மத்திய ஏஜென்சிகள் கவலை தெரிவித்ததாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால், இந்த 4 மாவட்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசின் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கியுள்ளவர்களை படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் கடலோர காவல் படையும் கடற்படையும் களம் இறங்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலமும் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மற்றம் கடலோரக் காவல் படையின் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உடன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (19.12.2023) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில், இந்திய ராணுவம், விமானப் படை, கப்பல்படை, தேசிய பேரிடர் மீடப்புப் படை, இந்திய வானிலை மையம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் தற்போதைய நிலவரம் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து, ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளில் மாநில அரசின் ஒருங்கிணைப்பு இல்லை என மத்திய ஏஜென்சிகள் கவலை தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ராஜ்பவன் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், பதிவிட்டிருப்பதாவது: “தமிழகத்தின் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆளுநர் இன்று சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், ரயில்வே, பி.எஸ்.என்.எல், ஐ.எம்.டி, ஏ.ஏ.ஐ மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கலந்துகொள்ள கோரிக்கை விடுத்தும் மாநில அரசில் இருந்து யாரும் வரவில்லை.

குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் வளங்களை மாநில அரசின் வசம் வைத்து, மாநிலம் கோரும் போது செய்து வருகின்றன. அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள் மற்றும் முடிந்தவரை தங்களால் முடிந்தவரை வழங்குகிறார்கள்.

சில ஏஜென்ஸிகள் (அமைப்புகள்) ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர்.

மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக நிலையான வளங்களைத் திரட்டுமாறு ஆளுநர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment