Ponmudi | CM stalin | Governor RNRavi | சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனால் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடியின் தண்டனையை நிறுத்திவைத்தது. இதனால், அவர் எம்.எல்.ஏ. ஆனார், தொடர்ந்து, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள கவர்னர், “பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்தக் கடிதத்தில், “பொன்முடியின் தண்டனையைதான் உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. அவர் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளிக்கவில்லை.
மேலும் இந்தத் தீர்ப்பு திருக்கோவிலூர் தொகுதிக்கு எம்.எல்.ஏ. இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக கூட வந்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“