'இங்கே இந்தியை திணிக்க முடியாது; சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமையான மொழி': ஆளுனர் ஆர்.என் ரவி

இதற்கு பனாரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 18 மாணவ - மாணவியர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.

இதற்கு பனாரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 18 மாணவ - மாணவியர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
governor r n ravi

சென்னை கிண்டி ராஜ்பவன் தர்பார் ஹாலில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவ மாணவியருடன் ‘தமிழ்நாடு தர்ஷன்’ எனும் தலைப்பில் நடந்த கலந்துரையாடல் ஆகும்.

Advertisment

இதற்கு பனாரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 18 மாணவ - மாணவியர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பேசிய ஆளுநர், "இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசார தலைநகராக தமிழ்நாட்டிற்கு 3,500 ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளது. இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ராஜ்பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும், உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் விளங்கும் என்றும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இளங்கலை பயிலும் மாணவர்கள் நிச்சயம் உயர்க்கல்வியை தமிழில் பயில வேண்டும் என்றும் மாணவர்களிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: