/tamil-ie/media/media_files/uploads/2023/01/RN-Ravi-3.jpg)
ஆளுனர் ஆர்.என்.ரவி
வருடத்தின் முதல் மாதத்தில், தை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
"பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளில் நமது வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுகிறோம்" என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். (1/2)
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 14, 2023
முன்னதாக தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் என்று சொல்வது சரியானது என்று ஆளுநரின் உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதை தொடர்ந்து, தற்போது ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.