/tamil-ie/media/media_files/uploads/2023/07/R-N-Ravi.jpg)
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆளுனர் சுவாமி தரிசனம்
தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி இரண்டு நாள்கள் பயணமாக தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். அவர் அரசினர் மாளிகையில் தங்கினார்.
தொடர்ந்து, சூரிய அஸ்தமனம், சூரிய உதயம், பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவில்களில் தரிசனம் செய்தார்.
முன்னதாக, தனிப்படகில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறை உள்ளி்டட இடங்களுக்கு சென்றனர்.
இந்த நிலையில், விவேகானந்த கேந்திரத்தில் உள்ள ராமாயண தரிசனம் கண்காட்சி கூடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து, இன்று சென்னை திரும்பினர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.