தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் (டி.என்.பி.எஸ்.சி தலைவர்) பதவிக்கு முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபுவை பரிந்துரை செய்த தமிழக அரசின் கோப்பை 2-வது முறையாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். சைலேந்திர பாபு நியமனத்தை ஏற்காத ஆளுனர் ஆர்.என் ரவி கூறும் காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் (டி.என்.பி.எஸ்.சி தலைவர்) பதவிக்கு முன்னாள் டி.ஜி.பி சி. சைலேந்திர பாபுவை பரிந்துரை செய்த தமிழக அரசின் கோப்பை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 2-வது முறையாக திருப்பி அனுப்பியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன செயல்முறை வெளிப்படைத்தன்மை இல்லாதது, அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி-யாக இருந்த சைலேந்திர பாபு ஜூன் 30-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற உடனேயே, தமிழ்நாடு அரசு டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு அவருடைய பெயரையும் மேலும் சிலரின் பெயர்களை டி.என்.பி.எஸ்.சி அமைப்பின் உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஒரு பரிந்துரையை அனுப்பியது. அந்த பரிந்துரை கோப்பை இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆளுநர் மாளிகை எந்த அடிப்படையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று கேள்வி எழுப்பி கோப்பைத் திருப்பி அனுப்பியது. மேலும், இந்தச் செயல்பாட்டில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டதா என்றும் கேட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு பெயரை பரிந்துரை செய்து ஆளுநர் மாளிக்கைக்கு மீண்டும் ஒரு கோப்பை அனுப்பியது. ஆனாலும், ஆளுநர் ஆர்.என். ரவி ரவி இந்த மாத தொடக்கத்தில் அந்த கோப்பை மீண்டும் திருப்பி அனுப்ப முடிவு செய்தார்.
இந்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி தேர்வு நடைமுறையில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் ஆளுநர் கூறியதாகவும் சில காலமாக காலியாக உள்ள டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான அரசின் நோக்கத்தை விண்ணப்பதாரர்கள் எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்று கேட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று ஆளுநர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக நியமிக்க, முன்னாள் டி.ஜி.பி சி. சைலேந்திர பாபுவின் பெயரைப் பரிந்துரை செய்த தமிழக அரசின் கோப்பை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 2-வது முறையாக மீண்டும் மாநில அரசுக்குத் திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், இந்த பரிந்துரைகள் அரசியலமைப்பு விதிகள் மற்றும் உரிமைக்கு முரணானவை என்று கூறியுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியலமைப்பு மற்றும் நிறுவனத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த கோப்பை மீண்டும் அனுப்புமாறு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனவரி 9, 2017 தேதி அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள செயல்முறை தேவை என்று மீண்டும் வலியுறுத்தியது. இந்த செயல்முறை இல்லாததால், தமிழக அரசின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் உள்ளது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரானது; அவர் தமிழக மக்களை கோபப்படுத்துகிறார் என தி.மு.க மூத்ஹ்ட தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகையில், அரசியலமைப்பின் 316(2) வது பிரிவு ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு 62 வயது உச்ச வரம்பிற்கு உட்பட்டு ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தை விதித்துள்ளது. ஜனநாயகத்திற்கு இன்றியமையாத நியாயமான நிர்வாகத்தில் சிவில் சர்வீசஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பணிக்கு தகுதியான அரசு ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் அரசுப் பணியாளர் ஆணையத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதன் நியாயமான, திறமையான மற்றும் வெளிப்படையான செயல்பாட்டிற்காக ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு நீண்ட கால அவகாசத்தை வழங்குவதே அரசியலமைப்பு நோக்கமாகும்.
ஆனால், இந்த பதவிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது சைலேந்திர பாபுவின் வயது 61 என்றும், நியமனம் செய்யப்பட்டால், அவர் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே பதவியில் இருப்பார் என்றும் ஆளுநர் கூறினார். உறுப்பினராக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு விண்ணப்பதாரர் எம்.சிவக்குமார், அவரது கல்லூரியில் நிர்வாக சீர்கேடு காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டவர், அவரது இடைநீக்கம் மேல்முறையீட்டு அதிகாரியால் உறுதி செய்யப்பட்டது. இத்தகைய பின்னணி கொண்ட ஒருவர், டி.என்.பி.எஸ்.சி ஆணையத்தின் உறுப்பினரிடம் எதிர்பார்க்கும் உயர்ந்த நேர்மையை பூர்த்தி செய்ய முடியாது என்று அந்த கோப்பினை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பும் போது கவர்னர் தனது கடிதத்தில் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.