scorecardresearch

நம் மொழிகளின் பெருமையை ஆங்கிலம் தடுக்கிறது: ஆளுனர் ஆர்.என் ரவி பேச்சு

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளுங்கள், ஆனால், நமது இந்திய மொழிகளை புறந்தள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.

தமிழ் கவிதையை நவீனத்துவத்தை நோக்கி அழைத்துச் சென்றா மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12) கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில், மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்திய நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. ரிஷிகளும், முனிவர்களும் கவிஞர்கள் ஆவர்.

ஆங்கில மொழி நம்மிடமே ஆதிக்கம் செலுத்துகிறது. ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளுங்கள், நமது இந்திய மொழிகளை புறந்தள்ளக் கூடாது. பிரதமர் மோடி நன்கு புரிந்து வைத்திருப்பதால் தான் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்.

நம் மொழிகள் பற்றி நமக்கு பெருமிதம் இருப்பது அவசியம். ஏனெனில் நம் மொழிகள் பாரம்பரியம் மிக்கவை. தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் உள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் இணையான வார்த்தைகள் இல்லை. நம் பாரத மொழிகள் உலகின் மற்ற மொழிகளை விட உயர்ந்தது, முதன்மையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உலக நாடுகள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவை தான் அணுகுகின்றன. நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, தேச ஒற்றுமைக்காகவும் கவிதை எழுதியவர் பாரதியார்.” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Governor rn ravi says english is hindering the pride of our languages