சென்னை கிண்டியில் இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று (நவம்பர் 05) நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நாம் இந்த நாட்டை உற்றுநோக்குவதன் அடிப்படையிலேயே மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நாட்டை நாம் நிலப்பரப்புகளாக, வெவ்வேறுபட்ட மக்கள் ஒரு அரசின் கீழ் அரசமைப்பு சட்டத்தின் கீழ் வாழ்வதாக பார்க்கவில்லை. அரசியலமைப்பு விட பாரதம் மிக மிகப் பழமையானது.
அரசியலமைப்பு பாரதத்தை உருவாக்கவில்லை. அடுத்த 25 ஆண்டுகளில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். இதற்கிடையில் நமக்கான இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய வேண்டியது அவசியம். அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை நோக்கியதே நம் பயணம் இருக்க வேண்டும்" என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil