பல்கலைக்கழக மானிய ஆணையம்.(யூஜிசி) விதிகளின் படி, மாநில பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரைச் சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை.
இந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டார்.
அப்போது, தமிழ்நாட்டின் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யத் தற்போது ஆளுநர் நியமித்துள்ள தேடுதல் குழுவில் வெளிமாநில நபர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் குழு அறிவிக்கையை ஆளுநர் ஆர்.என். ரவி திரும்ப பெற்றுள்ளார். அதில் தமிழக அரசு புதிய தேடுதல் குழுவை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“