Advertisment

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்: பல்சமய நல்லுறவு இயக்கம் கண்டனம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவதிற்கு கண்டனங்களை தெரிவிப்பதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கோவையில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Gov.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (பிப்.13) தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ள சம்பவத்திற்க்கு பல்சமய நல்லுறவு இயக்கம்  கண்டனங்களை தெரிவிப்பதாக கூறினார். 

Advertisment

Gov1.jpg

தொடர்ந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவது போல மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் கவர்னர்களை நியமிப்பது போல தெரிவதாக கூறிய அவர் மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர்களை இனி ஒவ்வொரு மாநிலத்திற்கும் பா.ஜ.க. மாநில தலைவர்களாக நியமிக்கும் பட்சத்தில் அவர்களது நோக்கம் நிறைவேறும் என தாம் நினைப்பதாக கூறினார். 

Gov2.jpg

தற்போது தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை வரவேற்பதாகவும்,எங்களது ஆதரவு என்றும் தளபதி மு.க.ஸ்டாலின் பக்கம் தான் எனவும் கூறினார். கவர்னர் மட்டுமே தேசப்பற்று உள்ளவர் போல காண்பித்து கொள்வதாக கூறிய அவர், இந்த நாட்டில்  உள்ள அனைவருக்கும் தேசப்பற்று உள்ளது. தேசிய கீதம் பாடும் முன்பே ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரிய செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Governor RNRavi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment