scorecardresearch

தொலைபேசி ஒட்டுக் கேட்பு ..  தமிழிசை சௌந்தரராஜன் புகார்

தமது டெலிபோன் பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்

தொலைபேசி ஒட்டுக் கேட்பு ..  தமிழிசை சௌந்தரராஜன் புகார்

தமது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மீது பரபரப்பு குற்றஞ்சாட்டு ஒன்றை சுமத்தினார்.

அதில் தமது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தாம் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “துஷார் என்பவர் தீபாவளி வாழ்த்து கூறியதில் இருந்து எனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக நான் சந்தேகம் கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக, தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம் கொடுத்து இழுக்க முயற்சி செய்ததாக முதலமைச்சர் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இந்தக் குற்றச்சாட்டை ஆளும் டிஆர்எஸ் முன்வைத்துள்ளது.

இதற்கிடையில் தற்போது தமது டெலிபோன் பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என ஆளுநர் புகாரை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Governor tamilisai soundararajan alleged that his telephone conversations are being tapped