Tamilisai Soundararajan fed cake to PTR Palanivel Thyagarajan : பிரதமர் நரேந்திர மோடி, திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) தொடங்கிவைத்தார்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல் .முருகன், எம்.பி ஞானதிரவியம், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பயணித்தனர்.
Hon'ble Governor @DrTamilisaiGuv shares her happiness travelling in the Inaugural special of Tirunelveli - Chennai Egmore #VandeBharatExpress #VandeBharat @RailMinIndia #SouthernRailway pic.twitter.com/wO9clgDb6o
— Southern Railway (@GMSRailway) September 24, 2023
இந்த ரயிலில் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை வரை பயணித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, “இந்த வந்தே பாரத் ரயிலானது உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
Attended the Inaugural of #VandeBharatExpress Train From Tirunelveli to Chennai Virtually Flagged off by Hon’ble @PMOIndia Shri. @narendramodi ji and Travelled alongwith Public from #Tirunelveli Railway station to #Madurai Railway Station.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 24, 2023
மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர… pic.twitter.com/vAE7hXERPb
மேலும், “பிரதமர் நரேந்திர மோடி ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 2009- 14 வரை ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
Thank you Hon'ble @PMOIndia Shri.@narendramodi Ji for Inaugurating #VandeBharatExpress train from #Tirunelveli to #Chennai.#VandeBharat#ThankUModiJi4VandeBharat@RailMinIndia @AshwiniVaishnaw pic.twitter.com/mtukbpKKJJ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 24, 2023
தொடர்ந்து, ரயில்களில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் கேக் வெட்டியதுடன் அதனை தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார்.
அவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.