puducherry governor Tamilisai Soundararajan with Law Minister Kiren Rijiju and Chief Minister N. Rangasamy
Puducherry Governor Tamilisai Soundararajan Tamil News: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு 105 அறைகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 'நல்ல சமுதாயம் உருவாக நீதித்துறையின் பங்கு அவசியம் என்றும், நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழிகளில் வாதாடும்போது வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகும்' என தெரிவித்தார்.
Advertisment
தமிழில் வாதாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம் என்றும், வரும் காலத்தில் தாய்மொழியில் வாதாடும் வாய்ப்புகள் உருவாகும் என்றும், இதற்கான பணிகள் நடந்து வருகிறது எனவும் கூறினார்.