Advertisment

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி பொதுவிடுமுறை: தமிழக அரசு அரசாணை

நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக நவ.10ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 6 செவ்வாய் கிழமை அன்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு சனி, ஞாயிறு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், திங்கள்(நவ.5) பணி நாளாக இருப்பதால், அன்றைய தினம் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து, மறுநாள் செவ்வாய் அன்று தீபாவளியை கொண்டாட வேண்டிய சூழல் இருந்தது. இது வெளியூர் செல்லும் மக்களுக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.

இந்த நடைமுறை சிக்கல் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக நவ.10ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

Tamilnadu Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment