தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 6 செவ்வாய் கிழமை அன்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு சனி, ஞாயிறு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், திங்கள்(நவ.5) பணி நாளாக இருப்பதால், அன்றைய தினம் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து, மறுநாள் செவ்வாய் அன்று தீபாவளியை கொண்டாட வேண்டிய சூழல் இருந்தது. இது வெளியூர் செல்லும் மக்களுக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.
இந்த நடைமுறை சிக்கல் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக நவ.10ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Govt announced november 5 as holiday for diwali
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?