Advertisment

சென்னை, திருச்சி... பல ஊர்களில் இன்றே தொடங்கிய அரசு பஸ்கள் ஸ்ட்ரைக்!

சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இப்போதே சில போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளை பணிமனைக்கு எடுத்து வந்து நிறுத்தியுள்ளதால், அரசு பஸ் ஸ்ட்ரைக் இப்பொதே தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu News Live Updates, MTC Bus strikes, MTC staff strike

கோப்பு படம்: அரசு பஸ்கள் ஸ்ட்ரைக்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்த அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உடன் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று (08.01.2024) இரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து, சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இப்போதே பேருந்துகளை பணிமணைக்கு திருப்பியதால், அரசு பஸ்கள் ஸ்ட்ரைக் தொடங்கியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த டிசம்பர் மாதமே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர் நல ஆணையம், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் 2 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படாததால், அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08.01.2024) இரவு 12 மணிக்கு வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.

இதனால், சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இப்போதே சில போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளை பணிமனைக்கு எடுத்து வந்து நிறுத்தியுள்ளதால், அரசு பஸ் ஸ்ட்ரைக் இப்பொதே தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காது என்பதனால் முன்கூட்டியே சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் பேருந்துகளை நோக்கி வருகின்றனர். புதுக்கோட்டையில் பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்கம்,  சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “பொங்கல் சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும்; வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், சில தொழிற்சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். தொ.மு.ச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், பேருந்துகள் உறுதியாக இயங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் சிவசங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசன நடத்தி வருகிறார். திட்டமிட்டபடி நாளை (09.01.2023) வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில், பேருந்துகளை சீராக இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள், காவல்துறையினர் பங்கேற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

bus strike
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment