விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி முடியும் வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பட்டாசு தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்படுவதன் எதிரொலியாக அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த நில நாட்களுக்கு முன் சிவகாசியில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு 5 பேருக்கு மேல் உயிரிழந்தனர். தொடர்ந்து மற்றொரு ஆலையிலும் தீவிபத்து ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக பட்டாசு தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தீ விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை தமிழகம் முழுவதும் அதிகாரிகள் குழு கூட்டம் நடத்தி அந்தந்த மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகரில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையை ஆய்வு செய்ய 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வருவாய், தீயணைப்புத்து றை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் கொண்ட குழு பட்டாசு ஆலைகளில் தினசரி அடிப்படையில் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி முடியும் வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“