Advertisment

எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு ரூ1000 உரிமைத் தொகை… அரசு எப்போது தெளிவுபடுத்தும்?

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை தமிழகத்தில் உள்ள எந்தெந்த பிரிவு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என்பதை தமிழக அரசு எப்போதும் தெளிவுபடுத்தும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
govt should clarify, which ration cards eligible for rs 1000 incentives for women the head of family, pds, எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு ரூ1000 உரிமைத் தொகை, தமிழக அரசு எப்போது தெளிவுபடுத்தும், குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை, ரேஷன் கார்டுகள், ration card, tamil nadu, rs 1000 incentives for women the head of family

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என்பதை தமிழக அரசு எப்போது தெளிவுபடுத்தும் என்று பொதுமக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisment

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் தெரிவித்தது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான தகுதியான குடும்ப அட்டைதாரர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின், இந்த அறிவிப்பு, தமிழக அரசு வழங்கும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை தமிழகத்தில் உள்ள எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என்று பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை தமிழகத்தில் உள்ள எந்தெந்த பிரிவு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என்பதை தமிழக அரசு எப்போதும் தெளிவுபடுத்தும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

வீட்டில் இருந்தபடியே ரேஷன் கார்டு அப்ளை செய்ய… வீடியோ!

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 5 வகையான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன.

அவற்றில் PHH - NPHH என மொத்தம் 1 கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 59 குடும்ப அட்டைகளும், வறுமையிலும் வறுமை (AAY) 18,63,077 குடும்ப அட்டைகளும், 8491 அன்னபூர்ணா (pds) குடும்ப அட்டைகளும், முதியோர் (oap) குடும்ப அட்டைகள் 4,01,045 குடும்ப அட்டைகளும் காவலர் குடும்ப அட்டைகள் (nphh) 59271 குடும்பை அட்டைகளும் உள்ளன.

மேற்கண்ட வகை குடும்ப அட்டைகளில் அரசின் கூடுதல் சலுகைகளும் மாறுபட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வறுமையிலும் வறுமை (AAY) அட்டை தாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

AAY ரேஷன் கார்டு குறிப்பாக நிலையான வருமானம் இல்லாத நபர்களுக்கு வழங்கப்படுகிறது. வேலையில்லாதவர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள். இந்த அட்டைதாரர்கள் ஒரு குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்களைப் பெற தகுதியுடையவர்கள். அவர்கள் அரிசிக்கு ரூ .3, கோதுமைக்கு ரூ .2 என்றமானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுகிறார்கள்.

இந்நிலையில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த தொகையை பெரும் நோக்கில் புதிதாக திருமணமானவர்கள் பலரும் பழைய ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்கிவிட்டு புதிதாக ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்து வருகின்றனர். இதனால், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதனிடையே, தனி நபர் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தனிநபர் ரேஷன் அட்டை தாரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுதொடர்பாக அரசு எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்ற திட்டத்தை குறித்து விசாரித்தபோது கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொண்டைகடலை போடாத கார்டுக்கு இல்லை என்று கூறியதாக அண்மையில் செய்திகள் வந்தன.

அதாவது, (NPHH) அட்டை தாரர்களுக்கு உரிமைத்தொகை இல்லையென்று என்றும் வதந்திகள் வந்தன. இந்நிலையில், ரேஷன் கார்டில் மோசடிகள் ஏற்படுவதை தடுக்க யார் யாருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்ற அறிவிப்பை அரசு முன்கூட்டி அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment