விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அரசாணை

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாவட்டங்களுக்கு இடையே  செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Kerala government imposes section 144 of crpc till october 31 to contain covid19 spread,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாவட்டங்களுக்கு இடையே  செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரொனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொது போக்குவரத்து தடை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால், இ-பாஸ் விண்ணப்பிக்கும் பலருக்கும் அனுமதி கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸுக்காக விண்ணப்பிக்கும் அனவைருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள ஆணையில், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்காக ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ-பாஸ் வழங்குவது நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் இ-பாஸ் பெறும் நடைமுறை அப்படியே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Govt to issue e pass to all applicants for likely to travel between districts

Next Story
கட்சியை கலைக்க தயங்க மாட்டேன்: நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கைKamalhaasan, makkal needhi maiam, tamilnadu, asembly election, warning, online meeting, obc reservation, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com