இருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா!

Gowsalya Sankar Another Honor-Killing Survivor Meets Amrutha: இரண்டு பேருடைய காதல் கதையும், முடிவும், போராட்டமும் கிட்டத்தட்ட ஒன்று தான்

By: Updated: September 21, 2018, 04:05:57 PM

Gowsalya Meets Amrutha: தெலுங்கானாவில் ஆணவ கொலையால் கணவரை இழந்து வாடும் அம்ருதவர்ஷினியை, வீர மங்கை கவுசல்யா சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த 2 நாட்களாக ஒட்டு மொத்த இந்தியாவையும் கலங்க வைத்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்த ஆணவக் கொலை. கர்ப்பமான காதல் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிரணாய், மனைவியின் கண்முன்னே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

Gowsalya Sankar Meets Pranay’s Wife Amrutha: துணிந்து வா போராடலாம்!

சொந்த மகளின் வாழ்க்கையை சற்றும் யோசிக்காமல் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், 1 கோடி ருபார் கொடுத்து கூலிப்படையை ஏவி மருமகன் பிராணாயை கொன்றதாக பகீர் தகவல்கள் வெளியாகின. பிரணாய் வேறு சாதி என்பதால் அவரை முழு சம்மத்துடன் ஏற்றுக் கொள்ள முடியாத மாருதி ராவ், கட்சிதமாக திட்டமிட்டு பிராணாயை தீர்த்துக் கட்டினார்.

இந்த கொடூர ஆவணக் கொல்லை நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பிரணாயின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக் கொண்டு ஆணவக் கொல்லைக்கு எதிரான முழுக்கங்களை எழுப்பினர்.

தெலுங்கானாவில் அரங்கேறிய இந்த சம்பவம் கேட்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பிரணாய் அரிவாளால் வெட்டப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவியது. தெலுங்கானாவில் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலையுடன் அப்படியே ஒத்திப் போய்யுள்ளது.

Gowsalya Meets Amrutha: , Gowsalya Sankar Murder Case Survivor Kausalaya Meets Amrutha அம்ருதாவுடன் கவுசல்யா சந்திப்பு

சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டு ஆட்கள் மூலம் இந்த கொலை அரங்கேற்றப்பட்டது. சங்கரை கொலை செய்த, தனது உறவினர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கி தந்தார் வீரமங்கை கவுசல்யா.

இவர், தெலுங்கானாவில் பிரணாயை நினைத்து சோகத்தில் கிடக்கும் அம்ருதாவை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். அம்ருதாவிடம் பேசிய கவுசி, தனக்கும்,சங்கருக்கும் நேர்ந்த கொடுமையை அவரிடம் விளக்கினார்.

இரண்டு பேருடைய காதல் கதையும், முடிவும், போராட்டமும் கிட்டத்தட்ட ஒன்று தான் எறு கூறிய அவர், அம்ருதாவை எழுந்து வா துணிவுடன் போராடலாம் என்று நம்பிக்கை ஓட்டினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Gowsalya sankar another honor killing survivor meets amrutha wife of pranay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X