சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, சுகாதாரம் தொடர்பான கழிவுகள் (மாதவிடாய் போது பயன்படுத்தும் நாப்கின்கள்) மற்றும் அதன் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நாப்கின்கள் மற்றும் டயப்பர்களை தனித்தனியாக அப்புறப்படுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்போது ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 2 முதல் 10 டன்கள் வரை சுகாதாரக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
கொடுங்கையூர் மற்றும் மணலி எரியூட்டும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன், தனித்தனி பைகளில் வள மீட்பு மையங்கள், நுண் உரம் தயாரிக்கும் மையங்கள் மற்றும் பொருள் மீட்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகள் பெயிலிங் யூனிட்கள் மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், சுகாதாரக் கழிவுகளுக்கும் தீர்வு காண விரும்புவதாகக் கூறினார்.
பதினைந்து வார தரவுகளின்படி, அடையாறு, வளசரவாக்கம், திருவொற்றியூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர் மற்றும் தொண்டியார்பேட்டை மண்டலங்களில் இருந்து அதிகபட்சமாக 7 டன் முதல் 10 டன் வரை சுகாதாரக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அம்பத்தூர், மாதவரம், மணலி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய இடங்களில் 3 டன் முதல் 4 டன் வரை உள்ளது.
இது மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், போக்குவரத்துச் செலவு மற்றும் நேரத்தைக் குறைப்பதற்காக எரியூட்டியை அமைப்பது குறித்து மாநகராட்சி பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil