சென்னையில் பெரும்பாலான பொது இடங்களை சிறுநீர் கழிக்க மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செயலை தடுக்கவும், பொதுக்கழிப்பறையை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கவும் சென்னை மாநகராட்சி புது முயற்சி மேற்கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழித்தால் ரூபாய் ஐம்பது வரை அபராதம் கட்டவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த முடிவை நீண்ட காலமாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக எடுக்காமல் வைத்திருந்தனர். ஆகையால் இதை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குள் ஏதாவது ஒரு இடமோ அல்லது வீடோ, சில நாட்கள் காலியாக இருந்தால் தானாகவே ‘யுரின் பாயிண்டாக’ மாறிவிடுகிறது. ஆகையால் இந்த நிலையை தடுக்க மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்கள் அமைத்தது.
ஆனாலும், இந்த செயல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த முடிவை சென்னை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளனர்.