சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகரில் திடக்கழிவு மேலாண்மை வாரியத்தை தனியாருக்கு வழங்க சென்னை பெருநகர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு வரும் மார்ச் மாதம் முதல் டெண்டர் கோர முடிவு செய்துள்ளது.

சென்னையில் இந்த இரண்டு மண்டலங்களிலும் திடக்கழிவுகளை சேகரித்து கொண்டு செல்வது, அதை அகற்றுதல் மற்றும் சுத்திகரிப்புக்கான தேவைகள் குறித்து ஆய்வு செய்ய குடிமை அமைப்பு ஒரு ஆலோசகரை நியமித்துள்ளது.
கழிவுகளை அகற்றுவதில் மாநகராட்சி அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்தனர். சென்னையில் 50% ஈரக்கழிவு என்பதால், மண்டலங்களுக்கு அருகில் உரம் தயாரிக்க முயற்சி செய்ய திட்டமிடுகின்றனர்.
மேலும் அதில் 35% மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளாகும். மீதமுள்ள 15% மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். டெண்டர் அழைப்பதற்கு முன், 85% கழிவுகளை பதப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் 95% கழிவுகள் கொடுங்கையூரில் கொட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ராயபுரத்தில் 1.9 லட்சம் குடும்பங்களும், திரு.வி.க.நகரில் 2 லட்சம் வீடுகளும் உள்ளதால், தினமும் சுமார் 1,350 டன் கழிவுகள் உற்பத்தியாகின்றன.
இந்த இரண்டு மண்டலங்களிலும் சுமார் 840 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் உள்ளன மற்றும் கன்சர்வேன்சி ஊழியர்கள் அனைவரும் ஒப்பந்தத்தில் உள்ள தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக சம்பளம் பெறும் நிரந்தரத் தொழிலாளர்கள் ஆவர்.
நிரந்தரத் தொழிலாளர்கள் அவர்களது தற்போதைய சம்பளத்துடன் வேறு பணிகளில் இணைக்கப்படுவார்கள் என்றும், இந்தப் பணிக்கு புதிய தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கூறுகிறது.
இரண்டு மண்டலங்களிலும் கழிவு மேலாண்மைக்கு மிகவும் சவாலான பகுதிகள் எதுவென்றால்: மின்ட் ஸ்ட்ரீட், வால்டாக்ஸ் சாலை, என்எஸ்சி போஸ் சாலை, கூவம் சாலை, வாஷர்மென்பேட்டை, மீன் மார்க்கெட், டிவிகே நகர், கனப்பா தெரு ஆகியவை அடங்கும். இப்பகுதியில் பல சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் பட்டறைகள் இருப்பதால், அபாயகரமான தொழிற்சாலை கழிவுகளும் வெளியேறும் என்று கூறப்படுகிறது.