சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படுகிறது. பள்ளி வளாகத்தின் நுழையும் இடங்களிலும், தாழ்வாரங்களிலும், வகுப்பறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
29 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 90 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மூன்று தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 636 சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

4.64 கோடி செலவில் சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“நிர்பயா திட்டத்தின் கீழ், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 29 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 90 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 3 தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 636 சிசிடிவிகள் நிறுவப்பட்டுள்ளன,” என்று குடிமை அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை நடத்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச காலை உணவு, சீருடை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil