சென்னை மாநகராட்சி பொது இடங்களில் மக்களுக்காக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், நீச்சல் தெரிந்த தங்களது பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் துணை இல்லாமல் நீச்சல் குலங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சென்னை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
நீச்சல் குளங்களில் 3.5 அடி ஆழம் இருக்கின்ற பட்சத்தில், 4 அடிக்கு குறைவான உயரத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil