நடப்பு 2023 - 2024 நிதியாண்டில், 2.56 லட்சம் சொத்து உரிமையாளர்கள் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் வரி செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளனர்.
வாய்ப்பை தவறிய மக்களுக்காக, இன்று மற்றும் நாளை (ஏப்ரல் 9) ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சி சொத்துவரி செலுத்தவிருக்கும் உரிமையாளர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துகிறது.
குறுஞ்செய்திகல், வாட்ஸ்அப் மெசேஜ்கள், அழைப்புகள் ஆகியவற்றை மூலமாக சொத்துவரி செலுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
2023-2023 ஆம் ஆண்டில், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 1 முதல் 15ஆம் தேதி வரை, 2,19,127 பேர் சொத்து வரி செலுத்தியுள்ளனர். மேலும் விதிப்படி ஊக்கத்தொகையும் பெற்றுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919ன் படி, ஒவ்வொரு அரையாண்டுக்கும் முதல் பதினைந்து நாட்களில் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால், அவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை (அதிகபட்சமாக ரூ.5,000 வரை) வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
மக்கள் வரி செலுத்துவதை உறுதிசெய்ய நாளை (ஏப்ரல் 9-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் பல இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரி செலுத்தவிருக்கும் உரிமையாளர்கள் டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil