சென்னை மாநகராட்சியில் ‘சிங்கார சென்னை 2.0’ என்ற இரண்டாம் கட்ட புதுப்பித்தலுக்கு கீழ், பல்வேறு இடங்களில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

சிங்கார சென்னை 2.0 முயற்சியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி மேலும் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பள்ளிகள் அமைக்க தமிழக அரசு 98.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஈ.வி.ஆர்., சாலை) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா பொதுக் கூடத்திற்கு, தரைத்தளம் நிரந்தரமான மற்றும் சுழலும் கண்காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகமாக மாற்றப்படுவதற்கு 32.6 கோடி ரூபாய் செலவிடப்படும்.
1890ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கூடத்தில், மூன்று பக்க காட்சியகங்கள், ஒரு மத்திய காட்சியகம் மற்றும் அரை வட்ட வடிவ காட்சிக்கூடம் ஆகியவை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 16 பள்ளிக் கட்டிடங்கள் இடித்து புனரமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 3.8 கோடியில் எல்.பி.ஜி., தகனக் கூடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் தோட்டங்களுடன் கட்டப்படும்.
பூங்காவைப் பொறுத்த வரையில், யோகா மேடை, அமரும் பெஞ்சுகள், புதுமையான ஓவியங்கள் ஆகியவை சிறப்பம்சமாக இருக்கும் என்று சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.