சென்னையில் செல்லப்பிராணி வளர்க்கும் மக்களுக்கு தேவையான சேவைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, பெருநகர சென்னை மாநகராட்சி புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளது.
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான கிளினிக்குகள், செல்லப்பிராணிக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் கடைகள் மற்றும் போர்டிங் கேனல்களை இணையம் வழியாக பதிவு செய்யும் வாய்ப்பை பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கவுள்ளது.

இது செல்லப்பிராணி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும், செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் மேற்கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் மற்றும் நம்ம சென்னை அப்ளிகேஷன் ஆகியவற்றில் சேர்க்கப்படும் போர்ட்டலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் பதிவு செய்யப்படுவதை முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் கட்டாயமாக்கினாலும், மதிப்பிடப்பட்ட 10,000 செல்லப்பிராணிகளில் 1,500 மட்டுமே மாநகராட்சி பதிவேடுகளில் உள்ளது.
சென்னையில் தற்போது நான்கு மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி உட்பட தடுப்பூசிகள் வழங்கப்படுவதில்லை, மேலும் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டுவிட்டு, நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனைத்தடுக்க மாநகராட்சி இம்முடிவை எடுத்துள்ளது.
செல்லப்பிராணி உரிமையாளர்கள், கருத்தடை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதோடு, இனம், பாலினம், நிறம், அடையாளம், வயது மற்றும் தடுப்பூசிகள் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். அவர்கள் தங்கள் அடையாளச் சான்று மற்றும் செல்லப்பிராணிகளுக்குச் செல்லும் கால்நடை மருத்துவர் விவரங்களை வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil