சென்னையில் நூறு வருட பழமையான நாடக கொட்டகையை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீட்டெடுத்தது.
சென்னை வால் டாக்ஸ் சாலையில் உள்ள " ஒத்தவாடை நாடக கொட்டகை " பாரம்பரிய நாடக கொட்டகை ஆகும். தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா ஆகியோர் தங்களது ஆரம்ப காலத்தில் இங்கு தங்களது நாடகங்களை அரங்கேற்றினர்.

அப்படிப்பட்ட சிறப்பு மிக்க இந்த கொட்டகை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால் தனியாரிடம் இருந்தது.
ஆகையால், இந்த கொட்டகையை மீட்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 25ஆம் தேதி) மீட்டெடுத்தது.
மேலும், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் ஆகியோர் இந்த கொட்டகையை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil