3-ஆகப் பிரியும் சென்னை போலீஸ்: கமிஷனர் பதவிகளுக்கு சீனியர் ஐபிஎஸ்-கள் கடும் போட்டி

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13ம் தேதி அறிவித்தார்.

Greater Chennai Police commissioner office, Greater Chennai Police commissioner office devided into three, new police commissoner race going, shankar jiwal, 3-ஆகப் பிரியும் சென்னை போலீஸ், கமிஷனர் பதவிகளுக்கு சீனியர் ஐபிஎஸ்-கள் கடும் போட்டி, chennai police, tambaram, avadi, ips officers, new police commissioner posts

சென்னை பெருநகர காவல்துறை 3ஆக பிரித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால், புதிய போலீஸ் கமிஷனர் பதவிகளுக்கு சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில், சென்னையில் உள்ள தாம்பரம், ஆவடி பகுதிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13ம் தேதி அறிவித்தார். சென்னை பெருநகர காவல்துறையை 3ஆகப் பிரிப்பதில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு உடன்பாடு இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தாம்பரம், ஆவடி ஆகிய புதிய மாநகர போலீஸ் கமிஷனர் பதவிக்கு சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை பரப்பு அரக்கோணம் வரை நீட்டித்து கடந்த அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், மிகப் பெரிய மாநகராட்சியை ஒரே மாநகராட்சியாக நிர்வகிப்பது கடினமானது. அதனால், சென்னை மாநகராட்சியை 3ஆக பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று சென்னை மாநகராட்சி பிரிப்ப்தற்கான காரணங்களாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாம்பரம், ஆவடி மாநகராட்சி உருவாக்கப்பட்டதும் அதற்கான காவல்துறை வரையறைகளும் செய்யப்பட வேண்டும். அந்தந்த மாநகரங்களுக்கு என தனியாக போலீஸ் கமிஷனர் நியமனம் செய்யப்பட வேண்டும். நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை மாநகர காவல்துறை அதனால்தான் 3ஆக பிரிக்கப்படுகிறது. சென்னை மாநகர காவல்துறை என்பது மிகப் பரந்த எல்லையைக் கொண்டுள்ளது. வடக்கே மணலியில் தொடங்கி, தெற்கே வண்டலூர் வரையிலும், மேற்கே நசரத்பேட்டையில் தொடங்கி கிழக்கே ஈ.சி.ஆர் மாயாஜால் வரையிலும் சென்னை பெருநகர காவல்துறையின் எல்லை மிகப் பெரிய அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது.

தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லையில், மொத்தம் 12 காவல் மாவட்டங்களும் அதன்கீழ் 135 காவல் நிலையங்கள் இருக்கின்றன. சென்னையில் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்களும் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அதனால், அதிக எண்ணிக்கையிலான காவல் நிலையங்களை நிர்வகிப்பது சென்னை காவல்துறைக்கு கண்டிமானதாக மாறிவிடும். அதனால்தான், சென்னை பெருநகர காவல்துறை எல்லையை மாநகராட்சிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரித்து ஆவடியிலும் தாம்பரத்திலும் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்பட உள்ளது.

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் குரோம்பேட்டை, அடையாரின் சில பகுதிகளும் செங்கல்பட்டு காவல் எல்லையிலிருந்து கூடுவாஞ்சேரி ஆகிய காவல் மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னை விமான நிலைய காவல் எல்லையையும் தாம்பரம் ஆணையரகத்துடன் இணைக்கலாமா என்று ஆலோசனை நடைபெறுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல, அம்பத்தூர், பூந்தமல்லி, அண்ணாநகர் காவல் மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில காவல் நிலையங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ஆவடி மாநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட உள்ளதாகவும் எல்லைகளைப் பிரிப்பதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு பணி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், தாம்பரம், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் பதவிகளுக்கு சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டியும் முயற்சிகளும் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பெருநகர காவல் துறையை 3ஆக பிரிப்பதில் தற்போதைய சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் சங்கர் ஜிவாலுக்கு உடன்பாடு இல்லை என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.டி.ஜி.பி ரவியும், ஆவடிக்கு சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருக்கும் தாமரைக்கண்ணனும் நியமிக்கப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. கமிஷனராக ஏ.டி.ஜி.பி அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டால், அவர்களுடைய கட்டுப்பாட்டில் குறைந்தது 50 காவல்நிலையங்களாவது இருக்க வேண்டும். அதனால், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர காவல் எல்லைகளில் 30 காவல் நிலையங்கள் வருமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அதனால், ஐ.ஜி ரேங்க்கில் உள்ள அதிகாரிகளை நியமிக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை அளித்திருக்கிறார்கள். அதனால், ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் நியமிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.ஜி ரேங்க்கில் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆவடி, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பதவிகளுக்கான போட்டியில், ஐ.ஜி ரேங்க்கில் உள்ள ஐபிஎஸ் அத்காரிகள் வனிதா, பிரேம் ஆனந்த் சின்ஹா, அன்பு உள்ளிட்டவர்களின் பெயர்கள் பேசப்பட்டு வருகிறது.

ஏ.டி.ஜி.பி ரவி திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரை போலீஸ் கமிஷனராக்க முயற்சிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. ஆனால், ஆனால், சில ஆண்டுகளிலேயே அந்தப் பதவி ஒழிக்கப்பட்டு சென்னை மாநகர காவல்துறை ஒன்றாக்கப்பட்டது. ஆனால், இந்தமுறை தாம்பரம், ஆவடி இரண்டும் தனி மாநகராட்சிகளாக உருவாக்கப்படுவதால் தனி மாநகர காவல் ஆணையர்களை உருவாக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Greater chennai police commissioner office area divided into three new police commissioner race going

Next Story
ஆர்.எஸ்.எஸ் பாணியில் மிரட்டும் நாம் தமிழர் கட்சி… வைகோ, திருமா, இடதுசாரிகள் கடும் கண்டனம்Vaiko Thirumavalavan and other Social activists condemn Naam Tamilar on Prof Jeyaraman
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com