மாட்டு இறைச்சி : சென்னை காவல்துறையினர் சர்ச்சை ட்வீட்
சென்னை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், மாட்டு இறைச்சி தொடர்பான பதிவுக்கு, இது தேவையற்றது என்று பதில் ட்வீட் செய்துள்ளது. இந்த பதிவு கடும் சர்சையை ஏற்படுத்தியது.
சென்னை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், மாட்டு இறைச்சி தொடர்பான பதிவுக்கு, இது தேவையற்றது என்று பதில் ட்வீட் செய்துள்ளது. இந்த பதிவு கடும் சர்சையை ஏற்படுத்தியது.
Advertisment
நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பார் அபுபக்கர் மாட்டுகறி என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை பதிவு செய்திருந்தார். இதற்கு சென்னை மாநகர காவல்துறை அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து, இது போன்ற பதிவுகள் தேவையற்றது என்றும் இதை தவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த பதிவு பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. உணவு எனப்து தனிமனித சுதந்திரம், இதில் யாரும் கருத்து சொல்லகூடாது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் துறையின் @chennaipolice_ Twitter பக்கம் பொது மக்களின் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் குறைகள், ஆலோசனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்ற தகவல்கள் பறிமாற்றத்திற்கான தளமாகும். (1/2)
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) July 7, 2022
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் துறையின் ட்விட்டர் பக்கம் பொது மக்களின் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் குறைகள், ஆலோசனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்ற தகவல்கள் பறிமாற்றத்திற்கான தளமாகும். இதனால் தனிப்பட்ட பதிவுகளை தவிர்க்கவும் என்று சென்னை பெருநகர காவல்துறையின் ட்விட்டர் கணக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.