Advertisment

அண்ணாசிலை அருகே மின்சாரம் தாக்கி கீரை வியாபாரி மரணம்: குழந்தைகளுடன் பெண் போராட்டம்

தூத்துக்குடி அண்ணா சிலை அருகே மின்சாரம் தாக்கி பலியான கணவரின் மரணத்துக்கு பெண் ஒருவர் நீதி கேட்டு போராடி வருகிறார்.

author-image
WebDesk
Jun 05, 2023 23:17 IST
Greengrocer killed by electrocution near Anna statue in Tuticorin

தூத்துக்குடி அண்ணா சிலை அருகேயுள்ள தடுப்பு கம்பிகளில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கீரை வியாபாரி ஜெய் கணேஷின் குழந்தைகள்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் கீரை விற்பனை செய்து வாழ்ந்துவந்தார். இவர், மே மாதம் 25ஆம் தேதி தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் உள்ள இரும்பு வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Advertisment

இந்த அண்ணா சிலை திமுக மாவட்ட நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது கணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரின் மனைவி லிங்க சிவா, இரண்டு குழந்தைகளுடன் போராட்டம் நடத்திவருகிறார்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் தனது கணவரின் இறப்புக்கு நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தனது குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து, தனது கணவரின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை எனில் அவர் உயிரிழந்த அதே இடத்தில் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Dmk #Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment