வருகின்ற மார்ச் 18ஆம் தேதி, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் சார்பாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கலந்து கொண்டு குடிநீர், கழிவுநீர், வரி, கட்டணங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் 15 மண்டலங்களிலும் குறைதீர்க்கும் கூட்டம் மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மார்ச் 11ம் தேதியான இன்று நடைபெறுவதாக முடிவெடுத்தனர். இந்த கூட்டத்தின் கண்காணிப்பாளர் தலைமையில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள புதிய நீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை மண்டல அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது இந்தக் கவலைகளுக்கு உரிய விளக்கங்களை அதிகாரிகள் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil