/tamil-ie/media/media_files/uploads/2020/06/image-2020-06-20T084415.932.jpg)
சென்னை உஸ்மான் சாலையில் உள்ள 30 ஜி.ஆர்.டி நகைக்கடை ஊழியர்கள், இ.பாஸ் இல்லாமல் கோயம்புத்தூர் கிராஸ் கட் ரோட்டில் அமைந்துள்ள அதன் மற்றொரு கடைக்கு பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து வந்த கடை ஊழியர்கள் தங்களை கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக் கொள்ளாத காரணத்தால், வாடிக்கையாளருக்கும், சக ஊழியருக்கும் கொரோனா பெருந்தொற்று பரவுவதற்கான ஆபத்தை அதிகரித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளை கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி நகைக்கடை நிர்வாகம் பின்பற்ற தவறியதால், நகைக்கடை சீல் வைக்கப்படுகிறது என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்தார்.
Around30 employees of GRT Jewellery came from Chennai Usman Road branch to Coimbatore without E pass to Cross Cut Road branch without self quarantine endangering lives of customers and coworkers creating risk of spread of corona virus Shop is sealed @CMOTamilNadu@SPVelumanicbepic.twitter.com/U8v3xOqtmX
— Sumit IPS (@Sumitips) June 20, 2020
நகைக்கடையில் அரசு நிர்ணயித்த ஊழியர்கள் எண்ணிக்கையை விட அதிகளவு ஊழியர்கள் பணி புரிந்து வருவதாக வந்த புகாரினை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் சோதனை செய்தது. சோதனையில், சென்னையில் இருந்து, சில நாட்களுக்கு முன் சட்ட விரோதமாக ஊழியர்கள் வரவழைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
போக்குவரத்து காரணங்களுக்காக 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. முதல் கட்டமாக மண்டலத்திற்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து இயக்கப்படுகிறது. மண்டலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து கிடையாது. தனியார் வாகனத்தில் பயணிக்க விரும்புபவர்கள், வழக்கம் போல இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது. இ- பாஸ் வாங்கி பயணிக்கும் பயனர்கள் தங்களை கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது
30 ஊழியர்களும் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில், சென்னையில் இருந்து இவர்கள் எப்படி வந்தார்கள்? எந்த வகையான வாகனத்தை பயன்படுத்தினார்கள் என்ற அடுத்த கட்ட சோதனை விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.