ஜி.எஸ்.டி 2.0: நாளை முதல் ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமல்: மக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு!

நாளை முதல், 'ஜி.எஸ்.டி. 2.0' (சரக்கு & சேவை வரி) அமலுக்கு வர உள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறைகின்றன. பொருட்களின் அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் புகாரளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல், 'ஜி.எஸ்.டி. 2.0' (சரக்கு & சேவை வரி) அமலுக்கு வர உள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறைகின்றன. பொருட்களின் அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் புகாரளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
gst 2

நாளை முதல் ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமல்: மக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு!

இந்தியர்களின் சேமிப்பு குறைந்து, கடன் சுமை அதிகரிப்பதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி தள்ளுபடி அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஜி.எஸ்.டி. வரி விகிதங்களில் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

புதிய வரி விகிதங்கள்: முன்பு இருந்த 5%, 12%, 18%, 28% என்ற நான்கு வரி விகிதங்கள், இப்போது 5% மற்றும் 18% என்ற 2 எளிய வரி விகிதங்களாக மாற்றப்பட்டுள்ளன.

பொருட்கள் விலை குறைவு:

12% வரிசையில் இருந்த 99% பொருட்கள் 5% வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.

28% வரிசையில் இருந்த 90% பொருட்கள் 18% வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.

எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?

இந்த புதிய வரி விகிதங்கள் நாளை முதல் அமலுக்கு வருவதால் பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.

உணவுப் பொருட்கள்: ரெடிமேட் பரோட்டா, சப்பாத்திக்கு வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது (ரெடிமேட் பரோட்டா 18% இலிருந்து சப்பாத்திக்கு இருந்த 5% வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது). இதன் விலை ₹0.50 முதல் ₹5 வரை குறையும்.

Advertisment
Advertisements

சாக்லேட்டுகள், பாஸ்தா, நூடுல்ஸ், பன்னீர், நெய், வெண்ணெய், உலர் பழங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றின் வரி 5% அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலைகள் குறையும். உதாரணத்துக்கு, ஒரு கிலோ நெய் அல்லது வெண்ணெய் ₹600 ஆக இருந்தால், அது ₹40 குறைந்து ₹560 ஆகிறது.

வீட்டு உபயோகப் பொருட்கள்: ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், 32 இன்ச்களுக்கு மேற்பட்ட டி.வி., டிஷ் வாஷர் போன்ற பொருட்களுக்கு வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சராசரியாக அவற்றின் விலையில் 10% குறையும். சமையல், சாப்பாட்டுப் பாத்திரங்கள், குக்கர், தட்டுகள், கரண்டிகள் போன்ற பெரும்பாலான பொருட்களின் வரி 12% அல்லது 18% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள்: ஆடம்பர கார்களைத் தவிர, 1,200 சி.சி.க்கு கீழ் உள்ள கார்களின் வரி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.65,000 முதல் ரூ.3.5 லட்சம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. 350 சி.சி.க்கு கீழ் உள்ள மோட்டார் சைக்கிள்களின் வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டதால், அதன் விலை ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை குறையும். மின்சார வாகனங்களுக்கு இருந்த 5% வரி தொடர்வதால், அதில் எந்த மாற்றமும் இல்லை.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள்: மருத்துவ உபகரணங்கள், தெர்மாமீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், சில மருந்துகள் மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றின் வரி 18% மற்றும் 28% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மூக்குக் கண்ணாடிகள் மற்றும் லென்சுகள் மீது இருந்த 28% வரி 5% ஆகக் குறைக்கப்பட்டதால் ரூ.1,000 விலை உள்ள கண்ணாடி ரூ.750 ஆகக் குறையலாம்.

மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள்: பென்சில், ரப்பர் மற்றும் மேப்களுக்கு வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பொருட்கள்: சோப்புகள், டூத் பேஸ்ட், ஷாம்பு, தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போன்ற பொருட்களுக்கு வரி 18% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதால், ரூ.6.50 முதல் ரூ.40 வரை விலை குறையும்.

கட்டுமானப் பொருட்கள்: சிமெண்ட்டின் வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டதால், ஒரு மூட்டைக்கு ரூ.40 வரை குறைகிறது. கம்பிகளுக்கு இருந்த 18% வரி தொடர்வதால் அதன் விலையில் மாற்றம் இல்லை.

விலை உயர வாய்ப்புள்ள பொருட்கள்

துணிமணிகள்: ரூ.2,500க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு வரி 5% இலிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குல்ட் மெத்தைகள்: இந்த பொருட்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஆடம்பரப் பொருட்கள்: சிகரெட், புகையிலை மற்றும் ஆடம்பர கார்களுக்கு வரி 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகள் அதிகரிக்கும்.

பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி

விலை குறைப்புக்கு மாறாக, அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். இதற்காக, மத்திய அரசு சிறப்புப் பிரிவுகளைத் தொடங்கியுள்ளது.

இணையதளம்: https://consumerhelpline.gov.in

தேசிய நுகர்வோர் உதவி எண்கள்: 1800-11-4000 மற்றும் 1915

எஸ்.எம்.எஸ்: 14404 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Gst

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: