GST council becoming a rubber-stamp authority : 28.05.2021 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 43வது சரக்கு மற்றும் சேவை வரி மன்ற கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்று தன்னுடைய முதல் உரையை நிகழ்த்தினார் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், திமுகவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இந்த கவுன்சிலில் பேசுவது குறிப்பிடத்தக்கது. இந்த மன்றத்தில் அவர் மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி முறை மற்றும் மத்திய அரசின் மீது குவியும் அதிகாரங்கள் குறித்தும் உரையாடினார்.
அப்போது அவர் “இந்திய மற்ற அனைத்து நாடுகளைக் காட்டிலும், பொருளாதார அதிகாரப் பகிர்வுகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. கம்யூனிச கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் சீனாவில் துவங்கி, முதலாளித்துவத்தை கடைபிடிக்கும் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளில் இருந்தும் பின் தங்கிய நிலையில் தான் இந்தியா உள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் வெறும் அலங்கார முத்திரையாகவும், ஆராயமல் அங்கீகாரம் அளிக்கும் அதிகாரமாகவும் செயல்படுகிறது. மேலும் பலவீனமான ஜி.எஸ்.டி. செயலகம் மற்றும் அரசுசார் ஜி.எஸ்.டி. கட்டமைப்பு போன்ற தற்காலிக முகவர் நிறுவனங்களுக்கு கொள்கையை உருவாக்குவதற்கு உண்மையான அதிகாரங்களை அளித்துள்ளது.
பொருளாதார கூட்டாட்சி குறித்து பேசும் போது அவர், இந்திய அரசியலமைப்பு ஒரு போதும் கற்பனையே செய்யாத மட்டங்களில் மத்திய அரசுக்கு அதிகாரங்களை ஜி.எஸ்.டி. வருகை அதிகப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட அவர் 15வது நிதி அறிக்கையை சுட்டிக்காட்டி, ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்யும் போது கூறப்பட்ட வரி மிதப்பில் புதிய வரி முறைமை ஆதாயங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊக்கமளித்தல் மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று அவர் கூறினார்.
பெரிய நிறுவனங்களுக்கும், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துவிட்டது. தொழில்நுட்பம் மற்றும் சர்ச்சை தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவற்றின் சமமற்ற அணுகல் முறைகள் தான் இதற்கு காரணம் என்று அவர் கூறினார். வரிகளின் பங்கை கணிசமாக குறைத்தது, கொரோனா காலத்தின் போது வேறுபாடுகளின் சமரசத்திற்கான மத்திய அரசின் அணுகுமுறைகள் போன்ற காரணங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நம்பிக்கையை குறைத்துள்ளது என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil