தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பி.டி.ஆர்., டெல்லியில் சந்திப்பு

டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பி.டி.ஆர்., டெல்லியில் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு (Source: Twitter/NSitharamanOffice

டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

Advertisment

டெல்லியில் நார்த் ப்ளாக்கில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

 மதுரையில் நடைபெறுவதாக அறிவித்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், நிலுவை தொகை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, சென்னையின் மெட்ரோ பணிக்கான திட்டங்கள், மாநிலங்களுக்கான ஒரு லட்சம் கோடி மத்திய அரசின் நிதி உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

அக்டோபர் மாத இறுதியில் மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தின் தேதி, முன்னேற்பாடு நடவடிக்கைகள், உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த சந்திப்பு என்பது மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 48 வது கூட்டத்தை அடிப்படையாக கொண்டது தான் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

அதை பற்றின விவரத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

மேலும், “இன்றைய சந்திப்பில்  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பற்றியும், சென்னை மெட்ரோ, ஒரு லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடினோம். 

மேலும் சில திட்டங்களுக்கான தரவு பகிர்ந்து, வருங்காலத்தில் அமைக்கவிருக்கும் திட்டங்களுக்கான ஒப்புதலை 3-4 அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானோடு கலந்துரையாடினோம்", என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nirmala Sitharaman Gst Ptrp Thiyagarajan Finance Ministry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: